இந்த கலியுகத்தில் நாம் முழுமையாக வாழ்வோம். நாம்தான் எல்லாமும். தன்னைத்தான் உயர்த்தி தன்னையே மெல்ல மெல்ல கொல்லுகின்ற பகுத்தறிவை நம்பி அதன் வழியே செல்கிறோம். பகுத்தறிவு என்பது மனிதனின் ஒரு எல்லைக்குட்பட்டு செயல்படும் அறிவேயாகும். அது உண்மையை தெரிவிக்காது. ஒருவித மயக்கத்திற்கு உட்பட்ட அறிவு. அந்த அறிவைக் கொண்டு தெளிவு பெற முடியாது. ஆனால் இந்த கலியுகத்தில் அந்த அறிவைத்தான் ஒரு பெரிய வெளிச்சமாக வாழ்க்கைக்கு வரப்பிரசாதமாக எண்ணுகிறார்கள். ஆனால் ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் வரை சரியென்று பட்ட விசயம், பிறகு அந்த விசயம் தவறாகத் தெரியும். ஒரு நாட்டு விஞ்ஞானி காபி குடித்தால் நல்லது என்பார். ஆறு மாதம் கழித்து அடுத்த நாட்டு விஞ்ஞானி காபியில் நஞ்சு உள்ளது. அதை குடிக்காதீர்கள் என்பார். இன்னொரு நாட்டு விஞ்ஞானி காபி அளவோடு சாப்பிடுங்கள். அதற்காக காபி சாப்பிடுவதையே விட்டு விடாதீர்கள் என்பார்.
நிலையில்லாத அறிவை நம்பி, தாம் நிலையாக இருப்போம் என்று எண்ணி தன்னை சார்ந்தவர்களையும் வருத்தி, தன்னையும் வருத்தி நிம்மதியில்லாமல் மனிதன் வாழ வேண்டுமென்பதே இந்த கலிபுருஷனின் மாயை ஆகும். கலிமாயை ஆகும்.
இதை அறிந்தால் மெல்ல மெல்ல சான்றோர்கள் துணையோடு விடுபடலாம். இல்லையெனில் தேனில் விழுந்து இறந்த வண்டு போல, மாயையின் பிடியில் சிக்கிக் கொண்டு பகுத்தறிவு என்று பேசிக் கொண்டு நாமும் ஒரு நாள் அநியாயமாக கூற்றுவனுக்கு இரையாக வேண்டியதுதான்.
No comments:
Post a Comment