இறைவனை
எங்கு தேடினாலும் கிடைக்காமல் மனிதன் அலைந்து கொண்டே இருக்கிறான். மலைகள், நதிகள், குகைகள், அடர்ந்த காடுகள், மலை அடிவாரங்கள் இது போன்ற
இடங்களில் தனிமையில் அமர்ந்து இறைவன் வருவானா? நமக்கு அருள் செய்ய மாட்டானா? என்று ஏங்கி தவிப்பார்கள்.
திருஅருட்பிரகாச
வள்ளலார், “அன்பெனும்
குடில் புகும் அரசே” என்று
இறைவனைப் பற்றி சொல்கிறார். இறைவனை நாம் அடைய வேண்டுமென்றால், இறைவனின் பிரதி பிம்பங்களான
மற்ற உயிர்களிடத்து நீ அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.
மனிதன் என்பவன், பாலூட்டி இனத்தை சேர்ந்தவன், சமுதாய விலங்கு. அவன்
ஒருவரை ஒருவர் சாராமல் வாழ முடியாது. இந்த உலகத்தில் பாலூட்டி உயிரினங்களுக்கு
மட்டும் பாசம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட உயர்ந்த மனிதன், தற்காலத்தில்
விஞ்ஞானத்தை நம்பி தன் வாழ்க்கையை இழந்து விட்டான், அன்பு செலுத்த மறந்து
விட்டான்.
பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், சாது சங்க தொடர்பு வேண்டும்,
தினந்தோறும் இறைவனை மனதார பூஜிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த
வேண்டும்.
இரக்கம் மனதில் வந்தால் இறைவன் உங்களிடத்து வருவான்.
No comments:
Post a Comment