Saturday, 18 July 2015

அன்னதானம் -


ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.
- திருமந்திரம் - 250.

விரைந்து உணவை உண்ணாதீர்கள். வருவிருந்து பார்த்து உண்ணுங்கள். காக்கை மற்ற காக்கைகளை  அழைத்து உண்பதை போல விருந்தை உபசரியுங்கள். அவரிவர் என்று எண்ணாமல் எல்லோரையும் சமமாக பார்த்து அன்னதானம் செய்யுங்கள். பழம்பொருள், சேர்த்து வைத்த பொருளில் ஒரு பகுதியாவது பிறருக்கு அன்னமிடுங்கள்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
- திருக்குறள்.

உண்டு மகிழ்ந்தவர் செல்ல அடுத்த விருந்தினர் வருகிறாரா என பார்த்து விருந்தை உபசரிப்பவர்க்கு வானவராகிய தேவர் இவரை உபசரிப்பர்.

அன்றறிவாம்என்னாதுஅறஞ்செய்கமற்றது
பொன்றுங்கால்பொன்றாத் துணை.
- திருக்குறள்.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாது இளமை இருக்கும்போதே அறத்தைச் செய்து கொள்ள வேண்டும்.

எனவே அவரிவர் என்று எண்ணாமல் வேறுபாடு பார்க்காமல் அன்னதானம் செய்க. அதையும் இளமை இருக்கும்பொழுதே செய்க.


No comments:

Post a Comment