Saturday, 6 August 2016

கல்வி

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

நாம் எந்த வகையான உயர்ந்த கல்வியை கற்றிருந்தாலும் அது இம்மைக்கு உதவுமே அன்றி மறுமைக்கு உதவாது. அதாவது நாம் இறந்து விட்டால் மீண்டும் ஒன்றாம் வகுப்பிலிருந்தே படித்தாக வேண்டும், விட்ட இடத்திலிருந்து தொடர முடியாது. இந்த கல்வி பொருளீட்ட மட்டுமே பயன்படும், தொடர்ந்து வரும் பிறவிப்பிணிக்கு மருந்தாகாது.
ஆனால் தூய்மையான மென்மையான நறுமணமுள்ள இறைவனுடைய திருவடியை தொழுது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் அடைவோம். அப்படி தொழா விட்டால் என்ன கல்வி கற்றிருந்தாலும், அந்த கல்வியால் யாதொரு பயனும் இல்லை.
கல்வியைக் கொண்டு பொருளை ஈட்டுவோம். பொருளைக் கொண்டு என்றும் அழியாத அறத்தை செய்து ஆன்மாவிற்கு மறுமையிலும் இன்பம் தரும் ஆக்கத்தை தேடுவோம்.

No comments:

Post a Comment