Friday, 17 July 2015

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
- குறள் எண்  - 351

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
- குறள் எண் - 33

பொருள் நிலையில்லாதது. ஆனால் இந்தப் பொருளை சதமென்று நினைத்தால் அது புல்லறிவு. பொருள் மிகச்சிறந்த வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன். என்றும் பொருளின் பிடியில் இருக்கக் கூடாது. நமது பிடியில்தான் பொருள் இருக்க வேண்டும். இதை விளக்கும் வகையில் இன்னோரு குறளில்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- குறள் எண் 247.

பொருள் கையில் இல்லையென்றால் இந்த உலகத்தில் வாழ இயாது என்றார். அங்கே பொருள் அல்லவற்றை பொருள் என்று உணருகிறீரகள். பொருள் நிலையில்லாதது என்றார்.

கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

கூத்தாட்டம் முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வது போல், செல்வம் அது போல் நிலையில்லாதது. அது போல செல்வம் நம்மை விட்டு ஒரு நாள் சென்று விடும்.

எனவே பொருளை நாம் பயன்படுத்த வேண்டும். பொருள் நம்மை பயன்படுத்தி விடக் கூடாது. பொருளைக் கொண்டு நாம் நிலையான அறத்தை செய்து கொள்ள வேண்டும்.

நிலையான அறம் செய்து பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment