Saturday, 18 July 2015

அன்னதானம் -


ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே.
- திருமந்திரம் - 250.

விரைந்து உணவை உண்ணாதீர்கள். வருவிருந்து பார்த்து உண்ணுங்கள். காக்கை மற்ற காக்கைகளை  அழைத்து உண்பதை போல விருந்தை உபசரியுங்கள். அவரிவர் என்று எண்ணாமல் எல்லோரையும் சமமாக பார்த்து அன்னதானம் செய்யுங்கள். பழம்பொருள், சேர்த்து வைத்த பொருளில் ஒரு பகுதியாவது பிறருக்கு அன்னமிடுங்கள்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
- திருக்குறள்.

உண்டு மகிழ்ந்தவர் செல்ல அடுத்த விருந்தினர் வருகிறாரா என பார்த்து விருந்தை உபசரிப்பவர்க்கு வானவராகிய தேவர் இவரை உபசரிப்பர்.

அன்றறிவாம்என்னாதுஅறஞ்செய்கமற்றது
பொன்றுங்கால்பொன்றாத் துணை.
- திருக்குறள்.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாது இளமை இருக்கும்போதே அறத்தைச் செய்து கொள்ள வேண்டும்.

எனவே அவரிவர் என்று எண்ணாமல் வேறுபாடு பார்க்காமல் அன்னதானம் செய்க. அதையும் இளமை இருக்கும்பொழுதே செய்க.


Friday, 17 July 2015

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
- குறள் எண்:2

கற்ற கல்வியிக்கு பயன்  என்ன?
தூய அறிவாக விளங்கும் இறைவனின் திருவடியை வண்ங்காவிட்டால், நீ என்ன படிப்பு படிப்பு படித்திருந்தாலும் என்ன பயன்?

எனவே கல்விக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை. படித்தவன்தான் சமுதாயத்தை ஏய்த்து பிழைக்கிறான்.


எனவே கல்வி கற்றாலும் கல்லாவிட்டாலும் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனின் திருத்தாள்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.
இதை கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் என்கிறார் போற்றித்திருஅகவலில் மகான் மாணிக்கவாசகர்.

கல்வி என்னும் மயக்கம் என்ன கற்றாலும் நமக்கு வரக்கூடாது என்கிறார்கள்.
கல்வி கற்பதால் பக்தி குறையக் கூடாது, பக்தி வளர வேண்டும்.

பகுத்தறிவுக்குள் இறைவனை காண நினைத்தால் இயலாது. நம்பிக்கையும் பக்தியும் முக்கியம்.

கல்வியுடன் பக்தியும் கற்போம்.


பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
- குறள் எண்  - 351

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
- குறள் எண் - 33

பொருள் நிலையில்லாதது. ஆனால் இந்தப் பொருளை சதமென்று நினைத்தால் அது புல்லறிவு. பொருள் மிகச்சிறந்த வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன். என்றும் பொருளின் பிடியில் இருக்கக் கூடாது. நமது பிடியில்தான் பொருள் இருக்க வேண்டும். இதை விளக்கும் வகையில் இன்னோரு குறளில்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
- குறள் எண் 247.

பொருள் கையில் இல்லையென்றால் இந்த உலகத்தில் வாழ இயாது என்றார். அங்கே பொருள் அல்லவற்றை பொருள் என்று உணருகிறீரகள். பொருள் நிலையில்லாதது என்றார்.

கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

கூத்தாட்டம் முடிந்தவுடன் மக்கள் கலைந்து செல்வது போல், செல்வம் அது போல் நிலையில்லாதது. அது போல செல்வம் நம்மை விட்டு ஒரு நாள் சென்று விடும்.

எனவே பொருளை நாம் பயன்படுத்த வேண்டும். பொருள் நம்மை பயன்படுத்தி விடக் கூடாது. பொருளைக் கொண்டு நாம் நிலையான அறத்தை செய்து கொள்ள வேண்டும்.

நிலையான அறம் செய்து பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.